என்கின்றனர் என்ற சொல் கடந்த பல ஆண்டுகளாக ஊடகங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ’என்கின்றனர்’ என்றால் யார் என்கின்றனர் என்று கூற வேண்டும். அதுதான் சிறந்த இலக்கணம். அதுதான் உணர்வுக்கு எதிர்வினை ஆற்றும் பண்பு.
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தியைப் பாருங்கள்.
‘வரலாற்றில் இதுவே முதல் முறை என்கின்றனர்’ என்று வாக்கியம் முடிகிறது. என்கின்றனர் என்றால் யார் அவர்கள்.
ஆய்வாளர்களா? பத்திரிகையாளர்களா?
உலக வரலாற்றில் இதுவே முதல் முறை என்று உறுதி செய்து வெளியிட வேண்டும்.
அல்லது சந்தேகமாக இருந்தால், ‘முதல் முறை என்று கருதப்படுகிறது’ என்று கூறலாம்.
என்கின்றனர் என்றால்?
’ன்னு ஊர்ல சொல்லிக்கிறாங்க’ என்று சொல்வது போன்று இருக்கிறது அல்லவா?
இந்த செய்தியைப் பாருங்கள். இது ஒரு திரை விமர்சனம். ’திருவிழாவைக் கொண்டாட முடிவு செய்கின்றனர்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
யார் முடிவு செய்கின்றனர் என்று கூறப்படவில்லை.
பெயர்ச்சொல் (subject) வேண்டும் அல்லவா?
கிராம மக்கள் அல்லது ஊர்க்காரர்கள் என்ற பெயர்ச்சொல் (subject noun) சேர்க்கப்பட வேண்டும்.
திருவிழாவைக் கொண்டாட கிராமத்தினர் முடிவு செய்கின்றனர்…
நேர்ப்பேச்சில் சொல்வது போல எழுத இயலாது அல்லவா?