தற்போது – தவறான பயன்பாடு
தற்போது என்ற சொல் பயன்பாடு…
சமீப காலங்களில் ஊடக எழுத்தில், பேச்சில் ‘தற்போது’ என்ற சொல் அதிகம் இடம்பெறுகிறது.
உதாரணமாக,
‘தற்போது உலகச் செய்திகளின் தொகுப்பைக் காணலாம்’ என்று ஒரு நேரலை தொலைக்காட்சிச் செய்திவாசிப்பாளர் கூறுவது பொருத்தம் அற்றது.
‘அடுத்து உலகச் செய்திகளின் தொகுப்பைக் காணலாம்’ என்று செய்திவாசிப்பாளர் கூறுவது பொருத்தமாக இருக்கும்.
‘தற்போது காற்று வேகமாக அடித்துக்கொண்டிருக்கிறது’ என்று சொல்லலாம்.
‘தற்போது பருப்பு கைவசம் இல்லை’ என்று சொல்லலாம்.
‘தற்போது அவர் உயிருடன் இல்லை’ என்று சொல்லலாம்.
‘தற்போது அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது?’ என்று கேட்கலாம்.
‘தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது’ என்று கூற முடியாது.
‘மழைக்காலம் தொடங்கிவிட்டது’ என்று கூறலாம்.
‘இது மழைக்காலம்’ என்று கூறலாம்.
‘தற்போது மழை பெய்கிறது’ என்று சொல்லலாம்.
உதாரணத்திற்கு உதாரணம்…
‘சமீப காலங்களில்’ ஊடக எழுத்தில், பேச்சில் தற்போது என்ற சொல் அதிகம் இடம்பெறுகிறது…
என்று சொல்லலாம்.
‘தற்போது’ ஊடக எழுத்தில், பேச்சில் தற்போது என்ற சொல் அதிகம் இடம்பெறுகிறது…
என்று சொல்லமுடியாது.
—-
சமீபத்தில் ஒரு செய்தித் தொலைக்காட்சியில் தற்போது என்ற சொல் எப்படித் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்று பார்ப்போம்.
முன்னாள் முதல்வர், திமுக தலைவர் லண்டன் சென்றுவிட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
இதை அந்தத் தொலைக்காட்சி இப்படி ப்ரேகிங் செய்தியாக வெளியிட்டது…
மு.க.ஸ்டாலின் தற்போது சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
லண்டன் சென்றிருந்த ஸ்டாலின் இன்று மாலை சென்னை வந்தடைந்தார்.
திருத்தம்…
தற்போது சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கிறார்
என்று சொன்னால் திருத்தமாக இருந்திருக்கும்.
தற்போது என்ற சொல் அந்தக் கணத்தில் நடப்பதைச் சொல்வதே சிறந்தது.
—-
அடுத்து ஒரு உதாரணம்.
2021ல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில்போட்டியிட்ட திருமகன் ஈ.வெ.ரா. 2013ல் மரணம் அடைந்தார். அங்கு போட்டியிட்டு வென்ற அவருடைய தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 2014ல் காலமானார். அங்கு தேர்தல் வந்தது. அங்கு போட்டியிட திமுகவின் சந்திரகுமார் விரும்பினார். இது பற்றிய செய்தியை ஒரு செய்தித்தாள் வெளியிட்ட முறை:
தற்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் மரணத்தைத் தழுவியுள்ள நிலையில் அங்கு போட்டியிட திமுக விரும்புகிறது…
திருத்தம்…
தற்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் மரணத்தைத் தழுவியுள்ள நிலையில் அங்கு போட்டியிட திமுக விரும்புகிறது…
என்ற வரியில்
‘தற்போது’ என்ற சொல் தேவையற்றது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமாகி பல வாரங்கள் ஆகிவிட்டிருந்தன.
அதனால்
அவரும் மரணத்தைத் தழுவி உள்ள நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மீண்டும் இடைத் தேர்தலைச் சந்திக்கிறது…
என்று சொல்லலாம்.
அவரும் காலமாகிவிட்ட நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மீண்டும் இடைத் தேர்தலைச் சந்திக்கிறது…
என்று சொல்லலாம்.
இப்படிச் சொன்னாலே அது தற்போது என்றுதான் பொருள்படும்.
———–
புதிய படத்தை இயக்கி நடிக்க இருக்கும் பிரதீப் ரங்கநாதன் பற்றிய செய்தியை ஒரு செய்தித்தாள் இப்படி எழுதியது:
தமிழ் சினிமாவின் கவனித்தக்க நடிகராகவும் இயக்குனராகவும் மாறியுள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள, ‘எல்.கே.ஜி.’ படம் விரைவில் வெளியாக உள்ளது…
திருத்தம்…
தற்போது
என்ற சொல் தேவையற்றது.
பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள, ‘எல்.கே.ஜி.’ படம் விரைவில் வெளியாக உள்ளது…
என்று எழுதினால் தற்போது என்று பொருள்படும்.
——
மணி ரத்னம் இயக்கும் புதிய படம் பற்றிய செய்தி:
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணி ரத்னம், தற்போது கமல்ஹாசன் நடிப்பில், ‘தக்லைப்’ படத்தை இயக்கியுள்ளார்.
*தற்போது* இயக்கிக்கொண்டிருக்கிறார் என்று எழுதலாம். தற்போது ஒரு நிகழ்கால சூழலை விளக்கும் சொல். இயக்கியுள்ளார் என்பது முடிந்த காலத்தை குறிக்கும் சொல். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘தக்லைப்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார் என்று வரலாம். தற்போது இயக்கியுள்ளார் என்று நிகழ்காலத்தையும் முடிந்த காலத்தையும் ஒரே வாக்கியத்தில் சேர்க்க இயலாது.
—-