எடப்பாடி பழனிசாமி இறங்கி வந்துவிட்டார். பாஜக கூட்டணி சாத்தியப்படும். வென்றால் அரசில் பங்குபெற பாஜகவுக்கும் விருப்பம்தான். அண்ணாமலை முதலமைச்சர் ஆவது, சீமானை முதலமைச்சர் ஆக்குவது போன்ற எண்ணங்களை பாஜக சில ஆண்டுகள் தள்ளி வைத்துவிடும். முடிந்தவரை தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் எண்ணம். இரட்டை இலைச் சிக்கல் போன்றவற்றைத் தாண்டி பயணம் போக எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். போகிற வழியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா போன்றவர்களையும் வண்டியில் ஏற்றிக்கொள்ளவும் அவர் சம்மதம் தெரிவித்துவிடுவார். அதிகாரமே இல்லாமல் போவதைவிட அதிகாரத்தில் பங்கு கொடுப்பது போன்ற ஒரு சூழலை நுட்பமாக எதிர்கொள்ள அவர் தயார்தான். இதற்கெல்லாம் பெரிதாக ஆடிப் போக முடியாது போன்ற மன உறுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பல ஆச்சர்யங்களைத் தரும்.
-March 12, 2025