‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியான செய்தியைச் சொன்ன ஒரு தொலைக்காட்சி சேனல்,
‘விடாமுயற்சி திரைப்படம் ஒளிபரப்பான திரையரங்கின் முன்னால் ரசிகர்கள் கூடி பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்’
என்று செய்தியைச் சொன்னது.
என்ன அது?
திரையரங்கில் திரைப்படம் ஒளிபரப்பாகிறதா?
திரைப்படம் திரையிடப்பட்ட
என்றுதானே இருக்க வேண்டும்?
ஏதோ ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாவது போல்தான் திரையரங்கில் திரைப்படம் திரையிடப்படுவதும் என்று செய்தி எழுத்தாளர் நினைத்துவிட்டார் போல இருக்கிறது.
தவறு இல்லாமல் எழுதும் புதிய செய்தி எழுத்தாளர்கள் குறைந்துவிட்டார்களோ என்று எண்ணலாம்.
ஆனால் புதிய செய்தி எழுத்தாளர்கள் செய்யும் தவறுகளைத் திருத்தும் மூத்த செய்தி எழுத்தாளர்கள் குறைந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.
#vidamuyarchi #விடாமுயற்சி
———