விடுதலை 2.
ஆழமான கருத்தை entertaining ஆக சொல்லும் படம் விடுதலை 2.
வெற்றிமாறனின் சிறந்த இயக்கத்திற்கும் கதை நேர்த்திக்கும் இந்தப் படம் ஒரு எடுத்துக்காட்டு.
அதிகாரத்தின் சூட்சமங்களுக்கு சாட்சிகளாகத்தான் சாதாரண மனிதன் இருக்க நேரிடுகிறது என்பதைப் படம் பதித்துச் செல்கிறது.
மக்களுக்காகப் போராடும் நக்சலைட் இயக்கத்தின் தலைவனைக் குறிவைக்கிறது ஆளும் அரசு. அவன் கூறும் தத்துவங்களை உள்வாங்கும் கூட்டம் அவனுக்காகக் காத்திருக்கிறது.
ஒரு நக்சலைட் தலைவன் ஆட்சியின் பாதுகாப்பையும், பொருளாதார நன்மதிப்பையும் கூட நிர்ணயிக்க முடியும் என்பதை கதைப் போக்கு காட்டிச் செல்கிறது.
அதிகாரத்தின் குறி ஒரு நக்சலைட் தலைவனைப் பிடிப்பது மட்டும் அல்ல, அவனை வைத்து மக்களின் நம்பிக்கைகளை திசை மாற்றுவதும் கூட என்று படம் சொல்கிறது.
கதை சொல்லும் விதத்திலும், திரைக்கதையிலும், காட்சிகளை நகர்த்தும் விதத்திலும் வெற்றிமாறன் மிகவும் சுவாரஸ்யமாகப் படத்தை வடித்திருக்கிறார்.
படத்தில் பேசப்படும் தத்துவங்கள் படத்திற்கான நியாயங்களை வழங்குகின்றன.
நடிப்பு, ஒளிப்பதிவு, இசை என்று எல்லாமே படத்தில் அருமையாக அமைந்திருக்கின்றன.
அரசு, அதிகாரம், நக்சலைட் என்ற கதைப்போக்கில் மக்கள் மனதில் ஒரு புதிய பரிமாணத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது.
அமேசான் ப்ரைமில் இந்தப் படம் இருக்கிறது.