லப்பர் பந்து.
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள மகா வெற்றிப் படம் லப்பர் பந்து.
சமூகத்திற்கானச் செய்திகளைப் படு சுவாரஸ்யமாகச் சொல்லி பார்வையாளர்களைக் கொக்கிப் போட்டு இழுத்திருக்கிறது லப்பர் பந்து.
கிரிக்கெட் ஆட்டம் என்றாலே உள்ளும் புறமும் அரசியல் பொதிந்திருக்கும். பரபரப்பான முடிவுகளுக்குப் பின்னால் இருந்த சூட்சுமங்களை அறியவும் இயலாமல் போகலாம்.
கெத்து, அன்பு, வெங்கடேஷ் பாத்திரங்கள் மூலம் சமூகப் படிமங்கள் அலைபாய்வதை அடுக்கிச் செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.
யசோதை, துர்கா பாத்திரங்கள் மூலம் பெண்களின் மேலாண்மையை அழுத்தமாகப் பதிய வைத்திருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.
வேகமான காட்சிகள், குத்தி எடுக்கும் வசனங்கள், காட்சி மொழி பேசும் ஒளிப்பதிவு என்று பார்வையாளர்களை வணிக சூத்திரத்தில் இழுத்து தன் நோக்கத்தின் கூறுகளை வெற்றிகரமாகக் கடத்திவிடுகிறார் இயக்குனர்.
சாதி மேலாண்மை, ஆண் ஆளுகை மேலோங்கிய சமூகத்தின் சொல்லாடலில் சிதைவுகளை ஏற்படுத்தி படத்தை வெற்றி பெற வைத்தது இயக்குனரின் புத்திசாலித்தனம். அதற்கு ஈடு கொடுத்தது ரசிகர்களின் மனப்போக்கு.
டிஸ்கவரி ஹாட்ஸ்டாரில் லப்பர் பந்து இடம் பெற்றுள்ளது.
#lubberpanthu #லப்பர்பந்து