தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருக்கிறதா என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டது பெரும் சர்ச்சை ஆகிவிட்டது. இப்படி எல்லாம் பேசுவது சரி அல்ல என்று திமுக நாளேடு முரசொலி அர்ச்சனை பொழிந்துவிட்டது. அண்ணா பல்கலை மாணவி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப் போவதாக விசிக கூறுகிறது. இப்போது தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கொஞ்சம் குளிர் விட்டுப் போய்விட்டது. அடுத்த ஆண்டு தேர்தல் வரும் நேரத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக என்ற ஒரு மாற்று இருப்பது போல் காட்டப்படுகிறது. விஜயும் ஒரு மாற்றாகத் தெரிகிறார். அதனால் திமுக கூட்டணிக் கட்சிகளை கிள்ளுக் கீரையாக எடுத்துக்கொள்ள முடியாது. இதைச் சாக்காக வைத்து கூட்டணிக் கட்சிகள் திமுகவுக்குச் சவால் விட்டு வருகின்றன. இதைத் தாங்கும் வகையில் திமுகவும் செயல்பட்டு வருகிறது. ஆனால் திமுக முழு நம்பிக்கையோடு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களைத் தன் கட்டுக்குள் வைக்க ஸ்டாலின் முயன்று வருகிறார். இது வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்னும் தெளிவாகத் தெரியும். அப்படி ஒன்றும் விட்டுக் கொடுக்கும் மன நிலையில் கூட்டணிக் கட்சிகள் இல்லை. திமுகவும் இல்லை. விடாக் கண்டன், கொடாக் கண்டன் போலத்தான் திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் செயல்படுகின்றன.
#திமுக #சிபிஎம் #உதயநிதி #திருமாவளவன் #mkstalin #cpm #tiruma #tirumavalavan #vck