‘நாங்கள்தான் அடுத்து ஆட்சி அமைப்போம்’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்…
என்று தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கப்படுகிறது.
இப்படிச் சொல்வது மூலம் செய்தி வாசிப்பவர், அல்லது அந்தத் தொலைக்காட்சியினர் ஆட்சி அமைப்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது போல் ஆகிவிடுகிறது.
‘அதிமுகதான் அடுத்து ஆட்சி அமைக்கும்’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்….
என்று சொல்வது தொலைக்காட்சி, வானொலி ஊடகங்களின் செய்திகளுக்குப் பொருத்தமாக இருக்கும்.
அச்சு ஊடகங்களில்
‘நாங்கள்தான் அடுத்து ஆட்சி அமைப்போம்’ என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்…
என்று இருக்கலாம்.
இங்கு எடப்பாடி பழனிசாமியின் கூற்றுக்கு மேற்கோள்கள் போடப்பட்டுவிடுவதால் அது அவர் கூறுவது போல் ஆகிவிடுகிறது.
ஆனால் தொலைக்காட்சி, வானொலி போன்ற மின்னணு ஊடகங்களின் செய்திகளில் இவ்வாறு பயன்படுத்த முடியாது.
‘நான் அடுத்த ஆட்டத்தில் சதம் அடிப்பேன்’ என்று ரவீந்திர ஜடேஜா கூறியிருக்கிறார்…
என்று தொலைக்காட்சி, வானொலி செய்திகளில் கூற முடியாது.
அடுத்த ஆட்டத்தில் சதம் அடிப்பது உறுதி என்று ரவீந்திர ஜடேஜா கூறியிருக்கிறார்…
என்று தொலைக்காட்சி, வானொலி செய்திகளில் கூறலாம்.
———–