ஊடகங்களில், முக்கியமாக தொலைக்காட்சிச் செய்திகளில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் சொல் கூறப்படுகிறது.
இது செய்தி சொல்லும் ஊடகத்தின் நம்பகத்தன்மையைப் பாதிக்கிறது.
ஒரு செய்தி முழுமையாக உறுதியாகவில்லை என்றால் கூறப்படுகிறது என்று சொல்வது பொருத்தம்.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியின் செய்திகளில்
துறைமுகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அந்தப் பகுதியில் தொழிலாளர்கள் யாரும் இருக்கவில்லை என்றும் அதனால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது…
என்று கூறப்பட்டது.
நமது கேள்வி…
அந்தப் பகுதியில் தொழிலாளர்கள் யாரும் இருக்கவில்லையா?
அல்லது
அசம்பாவிதம் நடக்கவில்லை என்ற செய்தி உறுதிப்படுத்தப்படவில்லையா?
அசம்பாவிதம் நடந்திருந்தால் அது வெளியே வந்திருக்கும்தானே!
அந்தப் பகுதியில் தொழிலாளர்கள் யாரும் இருக்கவில்லை என்பதால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை…
என்று செய்தி சொல்லலாம்தானே.
அவசியம் இல்லாமல் கூறப்படுகிறது என்பதைத் தவிர்த்தால் செய்தி நன்றாக இருக்கும்.
செய்தி சொல்லும் ஊடகத்தின் நம்பகத்தன்மை கூடும்.