ஒரு செய்தித்தாளில் வந்த இங்கே குறிப்பிட்ட படத்தில் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய மந்திரி பூபேந்திர யாதவை சந்தித்தார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இவர் அமைச்சர், அவர் மந்திரியா?
பல சமயங்களில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரைச் சந்தித்துப் பேசினார் என்று செய்தித்தாள்கள் குறிப்பிடுகின்றன.
இங்கு இருப்பவர் அமைச்சர், அங்கு இருப்பவர் மந்திரியா?
இது ஒரு முரண்பாடு.
இது களையப்பட வேண்டும்.
இது உளவியல் சிக்கல் சார்ந்தது.
தமிழில் மொழிப் பயன்பாடு பகுப்பு அடைந்துவிட்டது. அதனால் மந்திரி என்று கூற முடிவதில்லை.
வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களை மந்திரி என்று அழைத்தால்தான் அவர்களின் அதிகாரம் தெரிகிறது என்று கூறப்பட்டு விடுகிறது.
மேலும் வேறு மாநிலங்களில் இருப்பவர்கள் தமிழர் அல்லாதவர் என்பதாலும் மந்திரி என்று குறிப்பிடப்படுகிறது.
இது ஒரு அறியாமை என்றுகூட சொல்லலாம்.
இது கைவிடப்பட வேண்டும்.
———