விஜய் முழக்கம்!
ஸ்டாலின், மோடி பெயர்களை துணிவாகச் சொல்லிவிட்டார் விஜய். ஆட்டம் களைகட்டுகிறது. விஜய் அடித்து விளையாடுகிறார். களத்தில் இன்னும் அவருக்கு இடம் இருக்கிறது. மக்கள் மனம் மாற வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. ஸ்டாலினும், எடப்பாடியும் எளிதாக விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள். அரசியல் சுனாமி என்று விஜய் கூறிக்கொண்டாலும் முதல்வர் பதவி எளிதாகக் கிடைத்துவிடாது. எப்போது பேசினாலும் அதிரடியாகப் பேசிவிடுகிறார் விஜய். தமிழில் நன்றாகப் பேசுகிற ஒரு அரசியல் தலைவராக அவர் இருக்கிறார். மக்கள் மனங்களை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது. ஆர்ப்பரிக்கும் இளைஞர் பட்டாளம் விஜய்க்கு எளிதாக அதிகாரத்தைக் கொடுத்துவிடும் என்று நம்ப முடியாது. விஜயின் இலக்கு மிகவும் தொலைவானது. அதற்கான அஸ்வாரம்தான் அவருடைய இப்போதைய அரசியல் பயணம் என்று கூறிவிட முடியும்.