விஜய் தவறு செய்துவிட்டார்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தெருவில் நின்று விஜய் போராடி இருக்க வேண்டும். அதிமுக, பாஜக செய்தது போல் அவருடைய கட்சியும் களம் கண்டிருக்க வேண்டும். ஆளுநரிடம் சென்று புகார் கொடுத்து விஷயத்தை உப்புச் சப்பு இல்லாமல் ஆக்கிவிட்டார். அவருக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார். ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்திருக்க வேண்டும். கை காட்டிவிட்டுச் சென்றது மக்களிடம் எடுபடாது. முன்னால் எழுதி மனப்பாடம் செய்ததைத்தான் விஜய் சிறப்பாகப் பேசுவார் என்ற எண்ணத்தை அவர் ஏற்படுத்திவிட்டார். செய்தியாளரிடம் பேசுவதுதான் மக்களிடம் சென்று சேர வாய்ப்பு ஏற்படுத்தும். போராட்டங்கள் அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். அவர் எப்போது உணர்வாரோ!!
#விஜய் #தவெக #அண்ணாபல்கலை #மாணவிபலாத்காரம் #vijay #tvk #annauniversity #studentsexualassault