பரந்தூரில் தோன்றினார் தவெக தலைவர் விஜய். படப்பிடிப்புத் தளத்திலிருந்து நேராக வந்தவர் போல அவர் இருந்தார். முன் தலையில் கொஞ்சம் செயற்கை முடி போலத் தெரிந்தது. விமான நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களிடம் அவர் உரையாடினார். பிரச்சார வாகனத்தில் அவர் வந்தது, தேர்தலுக்கு அவர் தயார் என்று காட்டியது. எழுதிக் கொண்டு வந்ததைச் சிறப்பாக அவர் பேசினார். ஆனாலும் மாநாட்டில் பேசியது போன்ற நெருப்பு பரந்தூர் பேச்சில் இல்லை. கொஞ்சம் நம்பகத்தன்மை குறைந்து காணப்பட்டது. அரசியல் சோர்வு கொடுக்கிறதோ என்ற எண்ணம் வந்தது. அவரைக் கண்டு ஆர்ப்பரித்த மக்களிடம் அவர் மீதான நம்பிக்கை தெரிந்தது. மற்ற தலைவர்களைவிட விஜயின் கள வருகை ஊடகங்களில் பெரிய தாக்கத்தைத் தந்தது. மக்களிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கை அது காட்டியது. ஒவ்வொரு மக்கள் சந்திப்பும் அவருடைய தரவரிசையை (ரேட்டிங்) மேலே கொண்டு போகிறது என்பது உண்மை.
#விஜய் #பரந்தூர் #தவெக #vijay #tvk #parandur