ஒரு முன்னணி செய்தி சேனலில் சொல்லப்பட்ட செய்தியில்,
ஐந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த விபத்தில் குமரேசன் சிக்கி மாற்றுத்திறனாளியாக மாறியதால் அவருக்கு சலுகை வழங்க கோரிக்கை விடப்பட்டது.
என்று சொல்லப்பட்டது.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த விபத்தில் குமரேசன் சிக்கி மாற்றுத்திறனாளியாக ஆகிவிட்டதால் அவருக்கு சலுகை வழங்க கோரிக்கை விடப்பட்டது.
என்று எழுதியிருக்க வேண்டும்.
யாரும் மாற்றுத்திறனாளியாக மாற முடியாது.
மாற்றுத்திறனாளியாக ஆகத்தான் முடியும்.
——–
இது இலக்கணம் தொடர்பானது அல்ல. மனித உணர்ச்சி தொடர்பானது. மனித உணர்ச்சியிலிருந்து விலகி செய்திகள் எழுதப்படுவதால் மக்களின் மனதுடன் ஒட்டுவதில்லை.