மூத்த ராமதாஸ் பாமக என்ற மன நிலையை உடைத்துவிட்டார். அவர்தான் பாமகவை உருவாக்கினார். இப்போது அதைப் பிளந்துவிட்டார். தந்தை, மகனுக்கு இடையே பல குடும்பங்களில் சண்டை வருவது உண்டு. இது உளவியல் தொடர்பானது. பாமக விவகாரத்தில் அதிகார நோக்கம் முக்கியமானது. வன்னிய சமூக மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்ற விருப்பம் இரு ராமதாஸ்களுக்கும் உண்டு. மூத்தவருக்கு வயதாகிவிட்டது. இருந்தாலும் மிகவும் கூர்மையாக இருக்கிறார். சின்னவர் அதிகாரம் பெற வேண்டும். ஆனால் மூத்தவர் போல் கூர்மை கொண்டவர் இல்லை இவர். இது மூத்தவருக்குப் புரிகிறது. யார் பெரியவர் என்ற போட்டி இப்போது வந்துவிட்டது. ஏற்கனவே கொஞ்சம் ஏமாற்றம் அடைந்திருக்கும் வன்னிய சமூக மக்களை இரண்டு ராமதாஸ்களும் கைவிட்டுவிடுவார்களோ என்ற சந்தேகம் இப்போது எழுகிறது.
———–