’நிலையில்’ என்ற சொல் வீணாக செய்திகளில் பயன்படுத்தப்படுகிறது. பொருளுடன் அது பயன்படுத்தப்படுவதில்லை.
மியான்மாரில் சமீபத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சுமார் மூவாயிரத்து 500 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு அரசு கட்டிடங்கள் முழுக்க இடிந்து நாசம் ஆயின….
என்று ஒரு சேனலில் செய்தி சொல்லப்பட்டது.
மூவாயிரத்து 500 பேர் உயிரிந்த நிலையில் சுமார் ஐந்தாயிரம் பேர் காயம் அடைந்தனர் என்று ஒரே மாதிரியான இரண்டு அம்சங்களைச் சேர்க்கலாம்.
இங்கு நிலையில் என்பதைப் பயன்படுத்தலாம்.
மியான்மார் நிலநடுக்கத்தில் பல லட்சம் கட்டிடங்கள் இடிந்துவிட்ட நிலையில், சுமார் பத்தாயிரம் அரசு கட்டிடங்கள் நாசம் ஆயின என்று ஒரே மாதிரியான அம்சங்களை நிலையில் என்ற சொல் மூலம் சேர்க்கலாம்.
உயிரிழப்பையும், கட்டிட இடிபாடுகளையும் ஒரே மாதிரியாக செய்தி எழுத்தாளர் பாவிக்க முடியாது. கூடாது.
என் செய்தி எழுத்து முறையில் ‘நிலையில்’ என்ற சொல்லை 99 சதவிகிதம் தவிர்த்துவிடுகிறேன். வாக்கியங்களை வெட்டி முடித்துவிடுகிறேன்.
மியான்மாரில் சமீபத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சுமார் மூவாயிரத்து 500 பேர் உயிரிழந்தனர். அங்கு அரசு கட்டிடங்கள் முழுக்க இடிந்து நாசம் ஆயின….
என்று பிரித்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.
————-