அதாவது, காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார் என்று இருக்கிறது.
இங்கு அதாவது என்ற சொல் தேவையில்லைதானே!
காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தனை அவர் அறிவித்தார் என்று இருக்கலாம்.
என்பவர் என்ற சொல் தேவையற்றது.
முகுந்தனை யாரோ போல் ஏன் காட்ட வேண்டும்? அவர் ஏற்கனவே ஒரு பொறுப்பில் இருக்கிறார்தானே!
தெரிந்தவர்களையும் தெரியாதவர் போல் நினைத்து என்பவர் என்று குறியிடும் ஒரு முறை ஊடகங்களில் இருக்கிறது. இதைத் தவிர்த்தல் சிறப்பு.