ஒரு இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இரண்டு பேர் மரணமடைந்த நிகழ்வின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
இப்படி காட்சி ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வந்துவிடுகின்றன.
இதில் இரண்டு பேர் மரணம் அடைந்தது செய்தியா? சிசிடிவி காட்சிகள் வெளியானது அதிர்ச்சியா?
முன்னொரு காலத்தில் அச்சு வடிவில் வெளியாகும் செய்தித் தாள்களுக்குப் படங்கள் ஓரிரு நாட்கள் கழித்துத்தான் கிடைக்கும். அவை அவற்றை வெளியிட்டு அதிர்ச்சியைக் காட்டும்.
இப்போது சிசிடிவி காட்சிகள் வெளியாக ஓரிரு நாட்கள் ஆகிவிடுகின்றன. அதனால் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சி தருகின்றன என்று எழுதப்படுகிறது.
ஒரு விபத்தில் இரண்டு பேர் மரணமடைந்த நிகழ்வின் சிசிடிவி காட்சிகள் ஒரு திரைப்படத்தின் action sceneகளா?
அப்படி ஒரு மன நிலை ஊடகங்களுக்கு இருப்பது சரி அல்ல.
ஒரு சமயத்தில் செய்தி ஊடகங்கள் விபத்தில் இறந்தவர்களை இரத்தப் பெருக்கோடு காட்டின.
இப்போது அது மாறிவிட்டது.
இதே போல்தான் சிசிடிவி காட்சிகள் வெளியாகி ஊடகங்களில் இடம்பெறுவதும் காலப்போக்கில் மாறிவிடும்.