தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் எல்லோரும் தோளில் பச்சை நிறத் துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.
காட்சி ஊடகங்களில் இது பற்றிய செய்தி இடம்பெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து தமிழக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் எல்லோரும் தோளில் பச்சை நிறத் துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்திருந்தனர்….
என்று செய்தி கூறப்பட்டது.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருவது அவர்களின் பணி. அதனால் அவர்கள் பச்சை நிறத் துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர் என்று கூறினால் பொருத்தமாக இருந்திருக்கும்.
ஏதாவது வெளி நிகழ்ச்சி அல்லது விழாக்களில் கலந்துகொள்ளும்போது அவர்கள் வருகை தந்திருந்தனர் என்று கூறலாம்.
ஒரு நிகழ்வின் உணர்வை செய்தி பிரதிபலிக்க வேண்டும்.
அப்போதுதான் மக்கள் செய்தியோடு ஒன்றுவார்கள்.