கடந்த ஆகஸ்ட் மாதம் தேவநாதன் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது ஒரு முன்னணி செய்தித் தொலைக்காட்சியின் ப்ரேகிங் செய்தியின் போது, செய்திவாசிப்பாளர் கூடுதல் தகவல் கேட்கும்போது, மூத்த க்ரைம் செய்தியாளர் ஒருவர் இப்படிப் பதில் கூறினார்….
‘வணக்கம்.
தேவநாதன் என்பவர் சென்னை மயிலாப்பூரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. அதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார்…’
என்று அவர் தொடர்ந்தார்.
சமூகத்தில் நன்கு தெரிந்த ஒருவரை ஏன், என்பவர் என்று விவரிக்க வேண்டும்?
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தேவநாதன் மயிலாப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்
என்றோ
பிரபல ஊடக அதிபரான தேவநாதன் மயிலாப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்
என்றோ
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தி வரும் தேவநாதன்
என்றோ
விவரித்திருக்கலாமே.
இப்படித்தான் ஒரு பிரபலமானவரைக்கூட அறியாதவர் போல ஊடகங்கள் சித்தரிக்கும்போது, மக்களிடமிருந்து செய்தி விலகிப் போகிறது.
இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.