ஊடகங்களில் தெரிந்தவரைக்கூட என்பவர் என்று விளிப்பது சாதாரணம் ஆகிவிட்டது.
இந்தப் படத்தைப் பாருங்கள்.
ஒரு திரைப்படத்தில் நடித்த ஒரு நடிகை, என்பவர் என்று ஆகிவிடுவாரா?
அந்த மாநிலத்தில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு அமைச்சர் நம் மொழியைத் தெரிந்தவருக்கு, என்பவர் ஆகிவிடுவாரா?
‘சோபிதா துலிபாலாவை’ என்று குறிப்பிடத் தயக்கம் இருக்கிறது.
‘கொண்டா சுரேகாவை’ என்று குறிப்பிடத் தயக்கம் இருக்கிறது.
மேலும் சில உதாரணங்கள்…
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
- என்பதில்
இந்த வழக்கறிஞர் பிரபலமானவர் என்று உணர்த்தப்படுகிறது.
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
- என்பதில்
அவர் பிரபலமானவர் இல்லை என்று உணர்த்தப்படுகிறது.
ஆனால்
வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் என்ற பயன்பாடு ஊடகங்களில் இருக்கிறது.
அவர்தான் வழக்கறிஞர் என்று கூறியாகிவிட்டதே. பிறகு என்பவர் என்பது எதற்கு?
இதே போல்தான்
ஆட்டோ ஓட்டுநர் குமார் என்பவரிடம் விசாரணை நடைபெறுகிறது
- என்று ஊடகங்களில் செய்தி எழுதப்படுகிறது.
இது உணர்வின் முரண்.
இந்த முரண்களைக் களைய வேண்டும்.