நாட்டின் மக்கள் தொகை பற்றிய செய்தியில் ‘தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் பேர் இருந்தனர்’ என்று சொல்வது மொத்த மக்களையும் குறிப்பதாக இல்லை. அப்படிச் சொல்வதாக இருந்தால் மொத்தம் எத்தனை பேர் என்று இறுதி எண்ணிக்கை வரைச் சொல்ல வேண்டும். எந்தக் குறிப்பிட்ட தேதியில் என்பதையும் குறிப்பிட வேண்டும். அப்போது பொருத்தமாக இருக்கும். பொத்தம் பொதுவாகச் சொல்லும்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சமாக இருந்து என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இதில் இலக்கணப் பிழை எதுவும் இல்லை. ஆனால் நுட்பம் என்பது கவனிக்கப்பட வேண்டும்.
-January 16, 2025