ஆனது என்ற சொல் ஊடகங்களில், முக்கியமாக காட்சி ஊடகங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
முக்கியமாக,
செய்திக் களங்களிலிருந்து தகவல் பகிரும் செய்தியாளர்கள் ஆனது என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
உதாரணமாக…
‘இன்று மழையானது அதிகம் பெய்ததால், வெள்ளமானது சாலையில் புரண்டு ஓடுவதால், போக்குவரத்து என்பது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் அணி வகுத்து நிற்பதால் சிக்கலானது அதிகரித்துள்ளது…’
இப்படி ஆனது என்ற சொல் செய்தி மொழிப் பயன்பாட்டில் அதிகம் வந்துவிட்டது.
இந்த ஆனது என்பதைத் தவிர்த்துவிட்டால் மொழி அழகாக இருக்கும்.
ஆனால்
வந்து
பாத்தீங்கன்னா
என்ற சொற்களை இடைச் சொற்களாகவும், சிந்திக்க அவகாசம் எடுக்கும் இடைவெளியாகவும் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது.
அதேபோல்தான்
ஆனது என்ற சொல்லும்
பயன்படுகிறது.
கொஞ்சம் கடுமையாகச் சொல்வதாக இருந்தால்
மக்களைத் தொலைக்காட்சிச் செய்திகளிலிருந்து ஓட வைப்பதே இந்த வகையான சொல் பயன்பாடுகள்தான்.
ஆனது
என்பதைத் தவிர்த்துத்தான்
செய்திகளை எழுத வேண்டும்.
செய்திகளைப் பேச வேண்டும்.
————