மெல்போர்ன் கிரிக்கெட் டெஸ்டில் நிதின் ரெட்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்…
ஊடகங்களில் இது போன்ற செய்தி மொழிப் பயன்பாடு இப்போது அதிகம் ஆகிவிட்டது.
மெல்போர்ன் கிரிக்கெட் டெஸ்டில் நிதின் ரெட்டி சிறப்பாக ஆடினார்.
அல்லது
சிறப்பாக பேட்டிங் செய்தார்
என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
‘ஆட்டத்தை வெளிப்படுத்தினார்’ என்று சொல்வது ஆங்கிலத்தில் எழுதுவது போல் ஆகிவிடுகிறது.
இது போன்ற செய்தி எழுத்து முறையை ஒரு குறிப்பிட்ட செய்தி எழுத்தாளர்தான் (உதவி-ஆசிரியர் என்பது இங்கு இப்படிக் குறிப்பிடப்படுகிறது) சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தொலைக்காட்சியில் பயன்படுத்தினார். அந்த முறை இப்போது அனைத்து செய்தி ஊடகங்களிலும் கோலோச்சுகிறது.
ஒரு ஆட்டக்காரர் சிறப்பாக ஆடினார்.
ஒரு ஆட்டக்காரர் சிறப்பாக பந்து வீசினார்.
ஒரு ஆட்டக்காரர் சிறப்பாக பேட்டிங் செய்தார்.
என்று எழுதுவது சிறப்பாக இருக்கும்.
——-