அதிபர் நாற்காலியில் ஒரு குற்றவாளி – Donald Trump convicted,dischrged
டொனால்ட் ட்ரம்ப்.
அமெரிக்காவின் புதிய அதிபர் ஒரு குற்றவாளி.
2016ல் நடந்த அதிபர் தேர்தலின் போது தன்னுடன் தொடர்பில் இருந்த ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்சை அமைதிப்படுத்த பணம் கொடுத்த வழக்கில் ட்ரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் சிறைத்தண்டனையிலிருந்தும், அபாரத் தொகை செலுத்துவதிலிருந்தும் நீதிமன்றம் அவரை டுவிடுவித்துவிட்டது.
அவர் மக்களால் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் நீதிமன்றம் இந்த முடிவை எடுத்திருக்கிறது.
மக்கள் முடிவு செய்தால் ஒரு குற்றவாளியும் அவர்களை ஆள முடியும் என்று வெளிப்பட்டிருக்கிறது.
இதுதான் ஜனநாயகம்.
இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
குற்றமும் தண்டனையும் எப்போது முடிவாகின்றன?
மக்கள் முடிவு செய்தால் குற்றம் தண்டனை ஆகலாம். தண்டனை குற்றம் ஆகலாம்.
மக்களின் மனதை பண்படுத்துவதுதான் ஒரு ஜனநாயகத்தின் வழிமுறையாக இருக்கிறது.
மாறிவரும் மக்கள் சமூகம் இதற்கான பக்குவத்தை எல்லோருக்கும் வழங்கும் என்று நம்பலாம்!
#டொனால்ட் ட்ரம்ப் #donald trump